JOTHI

JOTHI
the original form of god is 'Joy-full brightness'

Monday, February 3, 2020

திருவிளையாடல் புராணம்----பகுதி 26

திருவிளையாடல்  புராணம் 

                                      ஓம் நமசிவாய 

                               மதுரைக் காண்டம்



                                            
                              தல  விசேடப்  படலம் 



                                        பகுதி --2

பாடல்  244

அன்னிய தலங்கள் தம்மில் ஆற்றிய பிரமகத்தி 
பொன்னினைக் களவு செய்தல் கள் உண்டல் புனித
                                                      ஆசான் 
பன்னியைப் புணர்தல் இன்ன பாதகம் அனைத்தும் 
                                                      என்றும் 
தன்னிகர் ஆல வாயில் வதிபவர் தமை விட்டு ஏகும்.

விளக்கம் 244

பிற  இடங்களில் செய்த --பிரம்மகத்தி பாபம் , பொன்னை திருடுதல் ,கள் உண்ணல் ,புனிதமாக கருதவேண்டிய ஆசானின் மனைவியை கூடுதல் --முதலிய குற்றங்களால்  உண்டான பாவங்கள் அனைத்தும் ---

தனக்குத்தானே நிகரான "ஆலவாயில் "வந்து வசிப்பவர்களை விட்டு நீங்கிவிடும் .

*******************************************************************************
பாடல்  245

மற்றைய தலத்தின் சாந்திராயண மதியம் தோறும் 
உற்றபேறு இங்குக் கங்குலும் உண்டியால் அடைபேறு 
                                                        ஆகும் 
மற்றைய தலத்தின் மாதப் பட்டினிப் பலத்தின் பேறு
                                                        இங்கு 
உற்று ஒரு வைகல் உண்டி ஒழிந்தவர் பெறும்
                                                     பேறாகும்.


விளக்கம் 245

மற்ற இடங்களில் "சந்திராயண  விரதம் "

 {இந்த  விரதம் என்பது --வளர் பிறை சந்திரன் காலத்தில் ,ஒவ்வொரு கவளமாக உணவை உயர்த்தி ---தேய்பிறை காலத்தில்  ஒவ்வொரு  கவளமாக  உணவை குறைத்து ---ஒரு மாதம் முழுவதும் இருக்கும் விரதம் }
 இருப்பதினால்  உண்டாகும் நற்பலன் --

இங்கு  ஒரு நாள் பகலில் உண்ணாமல் இருந்து இரவில்  உண்பதால் கிடைத்துவிடும் .

மற்ற இடங்களில் மாதம் முழுவதிலும் பட்டினி கிடந்து விரதம் இருப்பதால் உண்டாகும் பலன் ---

இங்கு ஒரு பகல் பொழுது  உணவை நீக்கி  விரதம் இருப்பவர்களுக்கு --கிடைத்து விடும் 

*********************************************************************************


பாடல்  246

அயல் நகர் அடைந்து நான்கு திங்கள் நோன்பு 
                                             ஆற்றும் பேறு இவ் 
வியன் நகர் அடைந்து நோற்கும் அட்டமி விரதம் 
                                                       நல்கும் 
அயன் நகர் எய்தி ஆறு திங்கள் நோன்பு ஆற்றும் 
                                                      பேறு இவ் 
வியன் நகர்ச் சோம வார விரதமே அளிக்கும் அன்றே.

விளக்கம் 246

பிற இடங்களுக்கு சென்று நான்கு மாதம் விரதம் இருப்பதால் ஏற்படும்  நன்மையை  --

வியப்பிற்குறிய இந்த நகருக்கு வந்து கடைபிடிக்கும் "அட்டமி "விரதம் தந்துவிடும் --

பிறநகருக்கு  சென்று  ஆறு மாதங்கள் விரதம் இருக்கும் பலனை ---

வியப்பிற்குறிய இந்த நகரத்தில் இயற்றப்படும் "சோமவார  விரதம் " அளித்துவிடும் --இது  உண்மை .

*********************************************************************************
பாடல்  247

ஏனைய தலத்தில் ஓர் ஆண்டு உணவு ஒழிந்து
                                             இயற்றும் நோன்பால் 
ஆன பேறு இங்கு நோற்கும் சிவன் இரா அளிக்கும் 
                                                    இங்கே 
ஊன ஐம் பொறியும் வென்றோன் முப்பொழுது உண்டு 
                                                   வைகித் 
தான் அமர்ந்தாலும் கால் உண்டி இயற்றும் 
                                             மாதவத்தோன் ஆகும்.
விளக்கம் 247

மற்ற இடங்களில் -ஒருவருடம்  உணவு உண்ணாமல் இயற்றப்படும் விரதத்தால்  கிடைக்கும்  நற்பலன்கள் அனைத்தையும்  ---

இங்கு கடைபிடிக்கப்படும் "சிவராத்திரி "விரதம் கொடுத்துவிடும் .

இந்த இடத்தில் ஐம்பொறிகளையும் வென்றவன் மூன்று வேளையும் உணவை எடுத்துக்கொண்டே --தவம் இயற்றினாலும்

காற்றை மட்டுமே உண்டு தவம் இயற்றும் --மிகச்சிறந்த தவத்தை உடையவன்  ஆவான் .

********************************************************************************* 

பாடல்  248


இந்த நான் மாடம் ஓங்கும் ஆலவா இடத்தில் 
                                                  யாரேனும் 
அந்தணர் தமக்கு ஓர் முட்டி அரும் தவர் தமக்கு 
                                             ஓர் பிச்சை 
தந்தவர் புறம்பு செய்த சோடச தானம் தம்மால் 
வந்த பேறு அடைவர் பல் வேறு உரைப்பது என் 
                                             மதியான் மிக்கீர்.


விளக்கம் 248

இந்த --நான்குபக்கங்களிலும் மாடங்களால் சூழப்பெற்ற "ஆலவாயில் "  ஒருவர் -

 அந்தணர்களுக்கு   ஒரு பிடி அரிசி தானமாக தந்தாலோ -

செயற்கரிய தவம் செய்தவர்களுக்கு ஒரு பிடி அன்னம் இட்டாலோ --

அவர்களுக்கு --வேறு இடங்களில் "சோடச தானம் "செய்தால் ,என்ன பலன்  கிடைக்குமோ --அது தானாகவே வந்து சேரும் ---

அறிவில் சிறந்தவர்களே --இதைவிட வேறு சொல்வதற்கு என்ன இருக்கின்றது ---சொல்லுங்கள் -

*********************************************************************************


பாடல்  249

பல் வகைத் தலங்கள் எல்லாம் வைகிய பயனும்
                                                      என்றும் 
பல் வகைத் தீர்த்தம் எல்லாம் ஆடிய பயனும் என்றும் 
பல் வகைத் தானம் எல்லாம் நல்கிய பயனும் என்றும் 
பல் வகைத்து ஆன பூசை பண்ணிய தவத்தின் பேறும்



விளக்கம் 249

எப்பொழுதும் பல தலங்களுக்கு சென்ற பலனும் --
எப்பொழுதும் பல தீர்த்தங்களில்  முழுகிகுளித்த பலனும்--
எப்பொழுதும் பல வகையான தானங்களை  எல்லாம் செய்த பலனும்--
 எப்பொழுதும்  பலவகையான  பூசைகள்  மற்றும் தவம் எல்லாம் செய்ததனால்  உண்டான இம்மை மறுமை பேறுகளும் --

*********************************************************************************

பாடல்  250


ல் வகைத் தவங்கள் எல்லாம்முற்றிய                                                                                                                                                    பயனும்தூய
பல் வகை மந்திரத்தில் எய்திய பயனு                                                                                                                                                                  நூலின்
பல் வகை கேள்வி எல்லாம் ஆய்ந்து                                        உணர்பயனும
யோகம்
பல் வகை ஞானம் எல்லாம் பயின்று                                            உணர்ந்து
                                             அடங்கும் பேறும்.




விளக்கம் 250

பலவகையான மந்திரங்களை சொல்லுவதால் உண்டான பயனும் -

பல நூல்களை படித்து அறிந்து ,பல கேள்விகளை கேட்டு ஆராய்ந்து ,உணரப்பட்ட  பயனும் --

பலவகையான யோகம் ,ஞானம்  எல்லாம் பயிற்சி செய்து --உணர்வால் உணரப்பெற்று --மனம் அடங்கியதால் --பெறப்படும் --வீடுபேறும் --

********************************************************************************* 


பாடல்  251

அனைய தொல் பதியில் என்றும் வைகுவோர் 
                                             அடைவர் என்றால் 
இனைய தொல் பதிக்கு நேர் வேறு இல்லை இப் 
                                             பதியின் மேன்மை 
தனை அறிபவர் ஆர் ஈசன் தான் அறி யாதலாலே 
வினையை வெல்பவர் அங்கு எய்தி வதிவதே 
                                             வேண்டும் மாதோ.

விளக்கம் 251

முன்னே  சொல்லப்பெற்ற இத்தனை நற்பலன்களையும் --தொன்மையான இந்த திருத்தலத்தில் வசிப்பவர்கள்  அடைவார்கள் என்றால் ---

இதற்க்கு இணையான வேறு திருத்தலம் இல்லை --
 இந்த திருத்தலத்தின் மேன்மைகளை முற்றுமாக தெரிந்தவர்கள் யார் இருக்கின்றார்கள் --

அந்த எம்பிரான் "ஈசன் "தான் அறிவார் --

எனவே வினையை வெல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் ,அங்கு சென்று வசிப்பதுதான் சிறந்தது என்பதை தெரிந்து கொள்ளுங்கள் 

*********************************************************************************

பாடல்  252

கைத்தலம் நான்கு இரண்டு உடைய மலர்க்கடவுள் 
                                    மேல் ஒருநாள் கயிலை ஆதி 
எத்தலமும் ஒரு துலை இட்டு இத்தலமும் ஒரு துலை
                                    இட்டு இரண்டும் தூக்க 
உத்தமம் ஆம் திருவாலவாய் மிகவும் கனத்தது 
                                    கண்டு உலகின்மேலா 
வைத்த தலம் இது என்றால் இதன் பெருமை யாவரே 
                                    வழுத்தர் பாலார்.


விளக்கம் 252

எட்டு கைகளுடன் தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மதேவன் --முன் ஒரு நாள் ---

கயிலை முதல் எல்லா இடங்களையும் --ஒரு தராசில் ஒருபக்கம் வைத்து --மறுபக்கம் இந்த திருத்தலத்தை வைத்து --தூக்க --

இத்திருத்தலத்தை வைத்த பக்கம் கனத்தது கண்டு --

இந்த உலகில் ,இதுவே அனைத்திற்கும் மேலான திருத்தலம் ,என்று  கூறினார் ---

இப்படிப்பட்ட பெருமை பெற்ற இத்தலத்தின் மகிமையை யார்தான் வரையறுத்து கூறமுடியும் 

*********************************************************************************

பாடல்  253


அத்திருமா நகரின் பேர் சிவ நகரம் கடம்ப வனம்
                                             அமர்ந்தோர் சீவன்
முத்தி புரம் கன்னிபுரம் திருவால வாய் மதுரை முடியா
                                                  ஞானம்
புத்தி தரும் பூவுலகில் சிவலோகம் சமட்டி விச்சாபுரம்
                                                 தென் கூடல்
பத்திதரு துவாத சாந்தத் தலம் என்று ஏது வினால்
                                             பகர்வர் நல்லோர்.

விளக்கம் 253

அப்படிப்பட்ட சிறப்புமிக்க திருநகரை --
சிவநகரம் ,கடம்பவனம் ,விரும்பி சேர்ந்த ஜீவன்களின் முக்திநகரம் ,கன்னிபுரம் ,திருஆலவாய் ,மதுரை ,முடிவற்ற  ஞானத்தையும் புத்தியையும் தரும் இப்பூவுலகின்  சிவலோகம் என்றும் கூறுவார் --
 சமட்டி விச்சாபுரம்  ,தென்கூடல்  ,பக்தியை தரவல்ல துவாத சாந்த தலம்  என்றும் கூறுவார் --
இப்படியாக நல்லவர்கள் --ஒவ்வொரு காரணத்திற்க்காகஒரு பெயரை  இத்தலத்திற்கு கூறுகின்றார்கள் --

******************************************************************************


பாடல்  254

                           அறவோர் இறும்பூது எய்தி 
நன்று தலப் பெருமை அருள் செய்தனை கேட்டு உடல்
                           எடுத்த நயப் பாடு எல்லாம் 
இன்று அடைந்தேம் இனிச் சுவண புண்டரிகச் சிறப்பு 
                           அதனை இசைத்தி என்னக் 
குன்றம் அடக்கிய கருணைக்குன்றனையான் வரன் 
                               



விளக்கம் 254

என்று இத்தலத்தின் சிறப்புகளை கூறிய "குறுமுனியாகிய அகத்தியர் "முனிவருக்கு எதிரே இருந்த மற்ற முனிவர்கள் ,மிகவும் வியப்புற்று --

நல்லது ,இத்தலத்தின் பெருமைகளை  எங்களுக்கு மிக்க கருணையுடன் நீங்கள் கூறியதை கேட்டு --இந்த உடலை எடுத்ததின்  பயனை  இன்று அடைந்தோம் --

இனி பொன்தாமரை உடைய குளத்தின் சிறப்புகளை எங்களுக்கு  இனிமையாக யாக கூறவேண்டும் --என்று கேட்க --

விந்திய மலையின் கர்வத்தை அடக்கிய --கருணைமிகுந்த குன்றைப்போன்ற முனிபெருமான்  --முறையாக தொகுத்து கூற ஆரம்பிக்கின்றார் .

*************************************************************************************

பாடல்  255

விரத மாதவத்தீர் காணின் வெவ்வினை எல்லாம் 
                                                         வீட்டிச் 
சரதமா போக நல்கும் தபனிய முளரிவந்த 
வரவும் அக்கனக கஞ்சப் பெருமையும் வளனு நன்கா 
உரை செய்தும் கேண்மின் என்னா முனிவரன் 
                                             உரைக்கும் மன்னோ


விளக்கம் 255

விரதங்களை உள்ளடக்கிய சிறந்த தவத்தை செய்கின்ற முனிவர்களே --
கண்ணால் பார்த்தவுடன் --கொடிய பாவத்தையெல்லாம் தீர்த்து சுகத்தை அளிக்கக்கூடிய ' பொன்தாமரை ' தோன்றிய வரலாறும் --
அந்த "பொன்தாமரை "யின் பெருமையையும் ,வளமையையும் --
நன்றாக கூறுகின்றேன் --கேளுங்கள் --

என்று கூறி ,முனிவர் சொல்லத்தொடங்குகின்றார் .




                                                                               பொருள்எழுதியவர் 

                                                                            DR.S.வீரம்மா தேவி .MBBS


                    தல விசேடப்  படலம்   முற்றிற்று 

*************************************************************************************************************