JOTHI

JOTHI
the original form of god is 'Joy-full brightness'

Sunday, August 21, 2016

AATHMANAATHER TEMPLE--ஆத்ம நாதர் கோயில்

                              AATHMA NAATHER TEMPLE

                                             

                                ஆத்ம நாதர்  கோயில்      

          ' ஆத்மநாதர் ' என்று அழைக்கப்படும் 'ஆவுடையார் கோவில் 'திரு 'மாணிக்கவாசகரால் 'கட்டப்பட்டது என்று கூறப்படுகின்றது .


ஆவுடையார் --என்றால் 'லிங்கபாணத்தை' பொருத்தி நிறுத்தப்படும் நீள் வட்டவடிவ அடிப்பகுதி---இந்தக்கோவிலில் இந்த அடிப்பகுதியின் மீது நிறுத்தப்படும்  லிங்கபாணம் --இல்லை --

                                           

அந்த லிங்கபாணம் வெற்றிடமாக விடப்பட்டுள்ளது ---அந்த வெற்றிடத்தையே --இறைமூலமாக --வழிபடவேண்டும் என்பது இந்த கோவிலின் வழிபாட்டுமுறை .

                                               

அது வெகுஜன  மக்களுக்கு   புரியாது --அப்படி வழிபட விளங்காது என்ற காரணத்தினால் --அந்த இடத்தில் ஒரு கவசம் வைத்திருக்கின்றார்கள் .

லிங்க ரூபமே --அருவம்[அது ஒரு குறிப்பிட்ட உருவம் அல்ல  ] ,உருவம் [ஆனால் அது ஒரு உருவம் தான் ]
--இரண்டு கலந்த நிலை .இங்கு அதையும் தாண்டி --

இந்த அண்டப்பெருவெளி தான் --ஆவுடை --அதாவது அந்த 'நீள்வட்ட அடிப்பகுதி --உருவம் உள்ளது --
                                                  
-அந்த ஆவுடையை ஆக்கியவர் ஆன ---ஆவுடையார் ---அதன் மேலும் இருக்கிறார் --உள்ளும் இருக்கிறார் ---சுற்றிலும் இருக்கிறார் --எங்கும் இருக்கிறார் ---அவர் உருவம் அற்றவர் ---
                                               
பூஜாமுறையில்  ---
அவருக்கு காட்டப்படும் ஜோதி வெளியில் கொண்டுவந்து காட்டப்படுவதில்லை .

இறைவன் ஜோதி வடிவமானவன் என்பதால் --அங்கு காட்டப்படும் ஜோதி அங்கேயே வைக்கப்படுகின்றது .

புலன்களால் அறிந்து --மனத்தால் உணர்ந்து --ஆத்மாவால் வணங்கப்படவேண்டும் --அதாவது அந்த ஜோதி மனத்தால் உணரப்படவேண்டும் ---அதன் துகள்தான் நாமும் என்று உணரவேண்டும்-- ---நாமும் அந்த ஜோதியின் அங்கம் தான் என்பதால்  ---ஜோதியை ஜோதி வணங்கத்தேவையில்லை ----உணர்ந்து ஐக்கியமாதலே பிரதானம் என்பது இங்கே ---சம்பிரதாயம் என்பதின் மூலம் உணர்த்தப்படுகின்றது ---

மாணிக்கவாசகர் --அப்படி கலந்தவர் --
                                              


அவர் ஒரு பாண்டிய மன்னனுக்கு அமைச்சராக இருந்தவர் .அடிப்படையில் சிவபக்தரான இவர் --ஒரு முறை அரசனுடைய படைக்கு குதிரை வாங்குவதற்காக மதுரையிலிருந்து தெற்குநோக்கி சென்ற பொழுது ---திருப்பெருந்துறையில் ஒரு மரத்தடியில் சீடர்களுடன் அமர்ந்திருந்த குருவாகிய சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு ---இறைஅனுபூதி பெற்று ---தான் குதிரை வாங்க கொண்டுவந்த அரசனுடைய செல்வத்தை கோவில் கட்ட செலவழித்துவிட்டார் ----
                                             
பின் இறைவன் 'நரியை பரி ஆக்கிய 'திருவிளையாடலை நடத்த --பாண்டியமன்னனும் 'மாணிக்கவாசகரின் சிறப்பை உணர்ந்து --அவரை குருவாக அடைந்து உயர்ந்தான் .

                                                    


இங்கு ஆத்ம தத்துவமே பிரதானமாக சித்தரிக்கப்பட்டுள்ளது  ----

அம்பாள் இங்கு 'யோகாம்பாள் --அதாவது யோகத்தில் அமர்ந்திருப்பவளாக  சிவனின் மூலஸ்தானத்திற்கு வலப்புறத்தில் இருக்கின்றார் ---சிலை இல்லை ---ஒரு பீடத்தின் மீது பாதம் மட்டுமே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது ---
மிக மிக அமைதியான சூழல் உள்ளது .ஒரு பலகணி துவாரத்தின் வழியே தான் தரிசனம் ----

இது --முக்தி தத்துவத்தின் உயர்ந்த நிலை --அதாவது அம்பாள் தான் மாயையின் பிறப்பிடம் ---அவளே யோகத்தையும் அருளி ---ஆத்மமுக்திக்கும் வழிகாட்டியாகிறார் ----

மூலஸ்தானத்திற்கு பின்புறம் --மாணிக்கவாசகருக்கு இறைவன் குருவாக வந்து அருளிய காட்சி  சிற்பம் உள்ளது ---
                                             




நடராஜர் இருக்கின்றார் ---

நுழை வாயிலின்   இருபக்கமும் சிவருபங்களான ----தட்சன் வதத்திற்க்காக உருவான 'அகோர வீரபத்திரர் ',,,,யட்சன் வதத்திற்க்காக உருவான 'ரண வீரபத்திரர் ' ஆகிய இருவரும் ---அழகுற நின்றிருந்து மக்களுக்கு அபயம் அளித்துக்கொண்டிருக்கின்றார்கள் .
                                                  







நவகிரகங்களுக்கு தனி இடம் இல்லை .நவகிரகங்கள் கோவிலின் முன் பிரகாரத்தில் தூணில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது 
.                                                  
























அந்த பிரகாரத்தில் --நரிகளை  குதிரைகளாக்கி ---அதன் தலைமை பொறுப்பேற்று வந்த குதிரைப்படைத்தலைவனான இறைவன் சிவனின் உருவம் மிகமிக அழகாக வடிக்கப்பட்டுள்ளது ---
                                    


உள்சுற்று பிரகாரத்தில் --அர்ஜுனனுக்கு ஆயுதம் கொடுத்தருளிய சிவரூபம்  ,அவரின் மனைவியின் ரூபம் ----மிக அழகு ---ஜடை அழகு ---

                                             
                                 










ஒரு திருவிளையாடலில் ---தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கிவைக்கப்படும் ஒரு இனமக்களின்  ரூபத்தில் --அதாவது புலையன் ---புலத்தி --ரூபத்தில் --இறைவன் !!!-அழகோ அழகு --உண்மை முகத்தில் அறைந்தாற்போல் வெளிப்படும் ஒரு தோற்ற வடிவம் ----
                                                                 
                                     
                                                                      
                                                           
                                             
                                                              
                                        


இறைவன் படைப்பில் அனைத்தும் சமமே -------



சங்கநிதி --பதுமநிதி சிற்பம் --
                                                         


                                                 


இங்கு மாணிக்கவாசகர் தனி சந்நிதியில் மிக்க அலங்காரத்தில் --சிறப்பாக வழிபடப்படுகின்றார் -----
                                                        
                     



தெற்கு நோக்கிய திருக்கோவில் -----குருவான 'தட்சிணாமூர்த்தி 'தெற்குநோக்கிய தெய்வம் தான் ----எனவே ,இங்கு இறைவன் குருவாக வந்தவர் என்பதால் ---தெற்கு நோக்கிய திருக்கோவில் ---




அமைதியும்--- எழிலும் ---வேதத்தின் மூல தத்துவத்தை --உள்ளார்ந்த அர்த்தத்துடன் விளக்கும் குறியீட்டுடன் ---அமைந்த திருக்கோவில் ---

அதிக வருமானம் இல்லை என்று அங்கிருந்த கோவில் குருக்கள் சொன்னார் ----

பார்த்து தரிசிக்க வேண்டிய திருக்கோவில் ---

சிற்பங்களும் வெகு நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது --


                                ஓம் நமசிவாய --சிவாயநம  ஓம் 

                                             சர்வம் சிவார்ப்பணம் 

*********************************************************************************