JOTHI

JOTHI
the original form of god is 'Joy-full brightness'

Friday, August 5, 2016

திருவிளையாடல் புராணம்----பகுதி 3

                                   

                                       
MADURAI MEENATCHI AMMAN TEMPLE

   திருவிளையாடல்  புராணம் 

                                      ஓம் நமசிவாய 

                                                              கடவுள் வாழ்த்து 


                                                                  பரமசிவம் 

   பாடல் --6


பூவண்ணம் பூவின் மணம்போல மெய்போத மின்பம்*
ஆவண்ண மெய்கொண்ட  வன்றன் வலியாணை தாங்கி
மூவண்ண றன்சந் நிதிமுத் தொழில்செய்ய வாளா
மேவண்ண லன்னான் விளையாட்டின் வினையை வெல்வாம்.  [6]




விளக்கம் --6

பூவினுடைய நிறமும்  ,மணமும்  --அந்த பூவை விட்டு அகலாது இருப்பதை போல் ---உண்மையான அறிவினால் ஏற்படும் ஆனந்தத்தை --தன்னுள்ளே இயல்பாய் அமையப்பெற்ற --அழகிய திருவடிவத்தை கொண்டவனும் ---

தன் முன்னிலையில் _ தன்னுடைய சக்தியாகிய 'சக்தி தேவியின் 'ஆணையால் __ ஆக்கல் ,காத்தல் ,அழித்தல் ___ என்னும் முத்தொழிலை ---அயன் ,அரி ,அரன் --ஆகிய மூவரும் முறையே செய்துவர  ---

எந்த சலனமும் இல்லாமல் ஆனந்த மௌனத்தில் நின்று ,நிலைபெற்றிருக்கும் சிறப்பை பெற்றவனாகிய அந்தஇறைவனின் திருவிளையாடல் -- அதாவது கருணை --நம்முடைய கர்மவினையை வென்று நமக்கு வீடுபேற்றை அளித்து விடும் .
******************************************************************************************************************************************************************

                                                         பராசக்தி  

   பாடல் --7
                       அண்டங்க ளெல்லா மணுவாக வணுக்க ளெல்லாம்
                           அண்டங்க ளாகப் பெரிதாய்ச்சிறி தாயி னானும்
                              அண்டங்க ளுள்ளும் புறம்புங்கரி யாயி னானும்
                                  அண்டங்க ளீன்றா டுணையென்ப ரறிந்த நல்லோர்       (7)

  

விளக்கம் --7

இந்த பிரபஞ்சம் முழுவதிலும் பரந்து விரிந்திருக்கும் அனைத்து அண்டங்களும் அணுக்களாகவும் ,அணுக்களெல்லாம் அண்டங்களாகவும் ---மாறி மாறி தோன்றி --பெரிதாகவும் சிறிதாகவும் ஆனாலும் ---

அந்த அண்டங்களின் உள்ளேயும் ,அண்டங்களை தாண்டி வெளியேயும் நிலைத்து நின்று ஆதாரமாக விளங்கும் இறைவன் ---

அந்த அண்டங்களை பெற்றெடுத்த  உமையம்மைக்கு  துணையாக இருப்பவர் என்று தெய்வத்தை தரிசித்தவர்கள்  அறிவார்கள் ----

******************************************************************************************************************************************************************

                                                            சொக்கநாதர் 

   பாடல் --8
                               பூவி னாயகன் பூமக ணாயகன் 
                               காவி னாயக னாதிக் கடவுளர்க்
                             காவி நாயக னங்கயற் கண்ணிமா 
                                                                               தேவி  நாயகன் சேவடி யேத்துவாம்.         (8)                           


விளக்கம் --8


தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மா ,செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளின் தலைவனான திருமால்  ,கற்பக மரத்தின் தலைவனான இந்திரன் முதலிய தேவர்களுக்கு ---அவர்களின் ஆத்மாவின் தலைவனும் ------

மீன் தன்னுடைய இமைகளை மூடாமல் தன்னுடைய குஞ்சுகளுக்கு தன் பார்வையாலேயே  இரை கொடுத்து காப்பது போல ---இமை மூடாத  கண்களுடன் தன் குழந்தைகளான பிரபஞ்சம் அனைத்தையும் காக்கும் 'அங்கயற் கண்ணி 'அம்மையின் கணவரும் 

ஆகிய சொக்கநாதப்பெருமானின் திருவடிகளை சரணடைவோம் 

******************************************************************************************************************************************************************

                                                 அங்கயற்கண்ணம்மை 

   பாடல் --9

                             பங்கயற்கண் ணரியபரம் பரனுருவே
                                                                       தனக்குரிய படிவ மாகி
                            இங்கயற்க ணகனுலக மெண்ணிறந்த
                                                               சராசரங்க ளீன்றுந் தாழாக்
                            கொங்கயற்கண் மலர்க்ககூந்தற் குமரிபாண்
டியன்  

                                                               மகள்போற் கோலங் கொண்ட
                               அங்கயற்க ணம்மையிரு பாதப்போ
                                                           தெப்போது மகத்துள் வைப்போம்.      (9)




விளக்கம் --9

திருமாலின் நாபிக்கமலத்தாமரையில்  பிறந்த பிரம்மாவினாலும் சென்று தரிசிக்க  மிகவும் கடின முயற்சி எடுக்கவேண்டியிருக்கும் பரம்பொருளான இறைவனின் திருவுருவத்தை ---தன்னுடைய பிறப்பிடமாக   கொண்டு ----

பரந்து விரிந்திருக்கும் அண்டங்களையும் அதனுள் இயங்கும் அனைத்து பொருட்களையும் பெற்றெடுத்தும் ---

சரியாத மார்பகத்தையும் ,நறுமணம் சூடிய கூந்தலையும் ,மீன் போன்ற கண்களையும் கொண்ட குமரியாக பாண்டிய மன்னனுக்கு மகளாக பிறந்த 'அங்கயற்கண்ணம்மையின் 'திருவடிகள் இரண்டையும் எக்காலத்திலும் மறவாமல் மனத்துள் வைத்து வணங்குவோம் .  ----

******************************************************************************************************************************************************************

                                                                       சபாபதி    

   பாடல் --10

உண்மையறி வானந்த வுருவாகி யெவ்வுயிர்க்கு முயிராய் நீரின் 
   
தண்மையனல் வெம்மையெனத் தனையகலா 
திருந்துசரா சரங்க ளீன்ற
   
பெண்மையுரு வாகியதன் னானந்தக் 
 கொடிமகிழச்சி பெருக யார்க்கும் 
 
அண்மையதா யம்பலத்து ளாடியருள் 
   பேரொளியை யகத்துள்                                                                                                                                                       வைப்பாம்.  (10)


  
விளக்கம் --10


உண்மையான அறிவால் கண்டுணரப்படும் ஆனந்தத்தின் வடிவமாக இருப்பவரை --

எப்படி தண்ணீரை விட்டு அதன் குளிர்ச்சியையும்  ,தீயை விட்டு அதன் வெப்பத்தையும்  தனித்து பிரிக்க முடியாதோ __ அப்படி எல்லா உயிர்களு க்குள்ளே உயிராக ,, பிரிக்க முடியாமல் இருப்பவரை ---


பெண்மை உருக்கொண்டு இந்த அண்டசராசரங்களையும் பெற்றெடுத்த சிவகாமவல்லியம்மையின் மகிழ்ச்சி பெருக  ----

அனைத்து உயிர்களும் நெருங்கி அருகில் செல்ல முடிந்த நடனமேடையில் நடனமாடி அருள் புரியும்,, ஒப்பிட்டு கணிக்க முடியாத பேரொளி வடிவமாகிய ---சபாபதியை ----

நம்முடைய உள்ளத்துள் வைத்து நிலைநிறுத்திக்கொள்வோம் .

******************************************************************************************************************************************************************

                                                            சோமசுந்தரர் 

   பாடல் --11
                             சடைமறைத்துக் கதிர்மகுடந் தரித்துநறுங்
                                                         கொன்றையந்தார் தணந்து வேப்பந்
                             தொடைமுடித்து விடநாகக் கலனகற்றி
                                                           மாணிக்கச் சுடர்ப்பூ ணேந்தி
                                 விடைநிறுத்திக் கயலெடுத்து வழுதிமரு
                                                                        மகனாகி மீன நோக்கின்
                                      மடவரலை மணந்துலக முழுதாண்ட
                                                           சுந்தரனை வணக்கஞ் செய்வாம்.          (11)



விளக்கம் --11


தன்னுடைய சடைமுடி மறையுமாறு ,,,கதிரவனின் ஒளி போல் ஒளி வீசும்  அழகிய கிரீடத்தை தலைமீது அழகுற அமையுமாறு சூடி  --

தான் சூடியிருந்த நறுமணம் மிகுந்த கொன்றை மலர்களால் ஆன மாலையை எடுத்துவிட்டு ,,வேப்பம் பூவினால் ஆன மாலையை அணிந்து -- ----

தான் அணிந்திருந்த விஷம் நிறைந்த நாகங்களை கழற்றிவிட்டு ,,சுடர்வீசும் மாணிக்க கற்களால் ஆன பொன்னகைகளை அணிந்து ---

தன்னுடையதான  ரிஷபக்கொடியை ,தன்னிடத்திலேயே   நிறுத்திவைத்து விட்டு  ,,மீன் கொடியை கையில் ஏந்திக்கொண்டு ,மீனின் பார்வை போன்ற திருநோக்கினை உடைய தடாதகைப் பிராட்டியை மணம் புரிந்து ,மலையத்துவச பாண்டிய மன்னனின் மருமகனாகி -----

அனைத்து உலகங்களையும் ஆண்டு அருள் புரிந்த சோமசுந்தரபெருமானை வணங்கி நலம்பெறுவோம் .

******************************************************************************************************************************************************************

                                                  தடாதகைப்  பிராட்டியார் 

   பாடல் --12
                    செழியர்பிரான் றிருமகளாய்க் கலைபயின்று
                                                             முடிபுனைந்து செங்கோ லோச்சி
                     முழுதுலகுஞ் சயங்கொண்டு திறைகொண்டு
                                                 நந்திகண முனைப்போர் சாய்த்துத்
                                     தொழுகணவற் கணிமணமா லிகைசூட்டித்
                                                                             தன்மகுடஞ் சூட்டிச் செல்வந்
                          தழைவுறுதன் னரசளித்த பெண்ணரசி
                                                     யடிக்கமலந் தலைமேல் வைப்பாம்.   (12)



விளக்கம் --12


பாண்டிய மன்னனாம் மலையத்துவச மன்னனின் சிறப்புப்பெற்ற ஒரே மகளாக அவதரித்து ------
அனைத்து கலைகளையும் நன்கு கற்று ,நாட்டின் அரசியாக பட்டாபிஷேகம் செய்யப்பட்டு ,,தலையில் கிரீடம் சூடி கையில் செங்கோல் ஏந்தி  ,,நல்ல முறையில் ஆட்சி செய்து ,அரச குல வழக்கப்படி ___ அனைத்து உலகங்களிலும் இருந்த எல்லா நாடுகளையும் வென்று ,,அந்த அரசர்கள் அனைவரிடமிருந்தும் அவர்கள் தரும் "திறை பொருளை "ஏற்று -------

நந்தி தேவரை தலைவராக கொண்ட சிவகணங்களையும் போர்முனையில் எதிர்கொண்டு ,,அவர்களை பலம் குன்றச்செய்து ---

அதன்பின் சிவகணங்களால் தொழப்பெறுகின்ற சிவபெருமானை பணிந்து தொழுது ,,மணமாலை சூட்டி ,,கணவராக ஏற்று ,,தனக்குரிய மகுடத்தையும் அவருக்கு அர்ப்பணித்து ,குன்றாமல் செழித்து வளரும் செல்வத்தையுடைய தன்னுடைய நாட்டின் அரசுரிமையையும் அளித்து ,,

எல்லா உலகத்தில் உள்ள அனைத்து பெண்களுக்கும் __அழகு ,குணம் ,பண்பினால் ___ அரசியாக எக்காலத்திலும் விளங்கும் 'தடாதகைப் பிராட்டியாரின் 'தாமரைபோன்ற திருவடிகளை ,,நம் தலைமீது வைத்துக்கொள்வோம் ..

******************************************************************************************************************************************************************

                             கால்மாறி ஆடிய வெள்ளியம்பலவாணர் 

   பாடல் --13
                    பொருமாறிற் கிளர்தடந்தோ ளொருமாறன்
                                                                     மனங்கிடந்த புழுக்க மாற
                        வருமாறிற் கண்ணருவி மாறாது
                                                    களிப்படைய மண்ணும் விண்ணும்
                    உருமாறிப் பவக்கடல்வீழ்ந் தூசலெனத்
                                                  தடுமாறி யுழலு மாக்கள்
                         கருமாறிக் கதியடையக் கான்மாறி
                                               நடித்தவரைக் கருத்துள் வைப்பாம்.     (13)




விளக்கம் --13


 பல போர்களில் வெற்றிகண்ட தோள்களை பெற்றிருந்த ,ஒரு பாண்டிய மன்னனின்  மனதில் ஏற்பட்ட மிகுதியான புழுக்கம் நிறைந்த வருத்தத்தினால்  அவனுடைய கண்களில் இருந்து  -- அருவி போல பொழிந்த கண்ணீர் ___ ஆனந்த கண்ணீராக மாறும்படியும்  --------

பிறவிக்கடலில் வீழ்ந்து,,மண்ணுலகத்திற்கும்  விண்ணுலகத்திற்கும் மாறிமாறி சென்று ஊசல் போல் ஆடி க்கொண்டு  ,, அதிலிருந்து மீண்டு வர வழி தெரியாமல் உழன்று தடுமாறிகொண்டிருக்கும் --ஆத்மாக்களுக்கு ---மீண்டும் கருவில் செல்லாத  விதியை அடையும்படி  அருள்புரிவதற்காகவும்   ------

கால் மாறி ஆடிய வெள்ளியம்பலவாணரை  நம்முடைய கருத்தில் வைத்து வணங்குவோம் ..

******************************************************************************************************************************************************************

                                                                  தட்சிணாமூர்த்தி 

   பாடல் --14

கல்லாலின் புடையமர்ந்து நான்மறையா
     
றங்கமுதற் கற்ற கேள்வி
வல்லார்க ணால்வருக்கும் வாக்கிறந்த
     
பூரணமாய் மறைக்கப் பாலாய்
எல்லாமா யல்லதுமா யிருந்ததனை
     
யிருந்தபடி யிருந்து காட்டிச்
சொல்லாமங்ற சொன்னவரை நினையாம
     
னினைந்துபவத் தொடக்கை வெல்வாம்.   (14)




விளக்கம் --14

  கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து ,நான்கு வேதங்கள் ,ஆறு அங்கம் முதலான அனைத்து கல்வி கேள்வியைகளையும்  -----

அனைத்து பொருட்களுக்குள்ளும் ,,அதற்கு அப்பாலும் இருக்கும் இறைவனை ,,,அவர் இருக்கும் உண்மை நிலையிலேயே ,எதையும் மறைக்காமல்  -------

வாயைத்திறந்து சொல்லாமல் ,மௌனமொழியிலேயே ,கற்பித்து காட்டியவரை ------

நமக்கு நினைவு இல்லாமல் இருக்கும்போது கூட ---இடைவிடாமல் நினைத்து ----இந்த பிறவிப்பிணியை  வெற்றிகொள்வோம் .

******************************************************************************************************************************************************************

                                               சித்திவிநாயகக்கடவுள் 

   பாடல் --15

உள்ளமெனுங் கூடத்தி லூக்கமெனுந்
     
தறிநிறுவி யுறுதி யாகத்
தள்ளரிய வன்பென்னுந் தொடர்பூட்டி
     
யிடைப்படுத்தித் தறுகட் பாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக்
     
களித்துண்டு கருணை யென்னும்
வெள்ளமதம் பொழிசித்தி வேழத்தை
     
நினைந்துவரு வினைகள் தீர்ப்பாம்.      (15)



விளக்கம் ---15

நம்முடைய உள்ளமாகிய அறையில் --என்றும் தளர்வடையாத பெருவிருப்பம் ,என்னும் யானையை  கட்டும்உறுதியான தடித்த  கோலை [கட்டுத்தறி ]ஊன்றி ---பொறுமை ,நம்பிக்கை ,முயற்சியுடன்  கூடிய தளர்ச்சியடையாத அன்பு என்னும் ,கடினமான இரும்புச்சங்கிலியை  கோர்த்து ----

இப்படி தயார் படுத்திய நம் உள்ளத்தில் சித்தி விநாயகப்பெருமானை கட்டிவைத்து  ___ 

நம்முடைய மனத்தில் இருந்து அறுத்து எறியவேண்டிய ,கர்மவினைகளை தொடரச்செய்யும்  தீய எண்ணங்களை ஒன்றுதிரட்டி பெரிய உருண்டையாக்கி ,யானைக்கு தரும் உணவுக்கவளம் போல் --நாம் கொடுக்க ----

அதை மிக்க மகிழ்ச்சியுடன் வாங்கி உண்டு ,,கருணை என்னும் மத நீரை வெள்ளமாக பொழிகின்ற 'சித்தியானை '--வணங்கி --நமக்கு வரும் துன்பங்களை தீர்த்துக்கொள்வோம் .

******************************************************************************************************************************************************************

                                                         முருகக்கடவுள் 

   பாடல் --16

கறங்குதிரைக் கருங்கடலுங் காரவுணப்
     
பெருங்கடலுங் கலங்கக் கார்வந்
துறங்குசிகைப் பொருப்புஞ்சூ ருரப்பொருப்பும்
     
பிளப்பமறை யுணர்ந்தோ ராற்றும்
அறங்குரவு மகத்தழலு மவுணமட
     
வார்வயிற்றி னழலு மூள
மறங்குலவு வேலெடுத்த குமரவேள்
     
சேவடிகள் வணக்கஞ செய்வாம்.      (16)




விளக்கம் --16

கரிய நிறம்கொண்ட குதிரைகள் நிறைந்து கருங்கடல் போல் காட்சி அளித்த அரக்கர் சேனையும் --அலைவீசும் அந்த பெரிய கடலும் கூட பயந்து நடுங்கி கலக்கம் அடைய ---

மழைமேகங்கள் வந்து உறக்கம் கொள்ளும் அளவு உயர்ந்து விளங்கிய கிரௌஞ்ச மலை சிகரமும் ,மலைபோல் உறுதியான 'சூரபத்மனின் 'மார்பும் பிளந்திட --

நான்கு வேதங்களை கற்று உணர்ந்தவர்கள்  ,அதில் கூறப்பட்டுள்ள விதிகளை பின்பற்றி அறத்துடன் செய்யும் வேள்வித்தீயும் ,அரக்க பெண்களின் வயிற்றில் மிக்க துன்பத்தால் ஏற்படும் தீயும் ,,நன்கு பற்றி அணையாமல் 'திகுதிகு 'என்று முழங்கி எரிய ----


வீரம் கொஞ்சி விளையாடும் 'வேலாயுதத்தை 'தன் திருக்கரத்தில் எடுத்த, இறைவனின் திருக்குமாரனாகிய 'குமரவேள் ' ஆகிய -வேலெடுத்த இளம் பாலகனின் --சிவந்த திருவடிகளை --வணக்கம் செய்வோம் .

******************************************************************************************************************************************************************   
                                                                        நாமகள் 


   பாடல் --17


பழுதகன்ற நால்வகைச்சொல் மலரெடுத்துப்
     
பத்திபடப் பரப்பித் திக்கு
முழுதகன்று மணந்துசுவை யொழுகியணி
     
பெறமுக்கண் மூர்த்தி தாளில்
தொழுதகன்ற வன்பெனுநார் தொடுத்தலங்கல்
     
சூட்டவரிச் சுரும்புந் தேனுங்
கொழுதகன்ற வெண்டோட்டு முண்டகத்தா
     
ளடிமுடிமேற் கொண்டு வாழ்வாம்.      (17)





விளக்கம் ---17


குற்றங்கள் அனைத்தும் நீங்கிய ,நான்குவகை சொற்களாகிய மலரை எடுத்து [பெயர்ச்சொல் ,வினைச்சொல் இடைச்சொல் ,உரிச்சொல் ]  --அவைகளை பகுதி பகுதியாக சேர்த்து தொகுத்து வார்த்தைகளாக்கி ,வாக்கியங்களாக்கி ---

மலர்கள் ,எல்லாத்திசைகளிலும்   பரப்பும் இனிய மணத்தை போன்ற __ பொருட்சுவையோடு , வரிசை வரிசையாக ஒன்றுசேர்த்து   -----

மூன்று கண்களை உடைய இறைவனின்  சிறப்பு மிக்க தோள்களில்  --அன்பென்னும் நாரினால்  ,பெரிய மாலை போல் தொடுத்து  சூட்ட ----

வண்டுகள் இசைப்பாட ,இனிய தேன் நிறைந்து ,அகன்ற இதழ்களுடன் விளங்கும்  வெண்தாமரை  மலரில் வீற்றிருக்கும் 'நாமகளாம் சரஸ்வதி தேவியின்'திருவடிகளை நம்முடைய தலை மேல் வைத்துக்கொண்டு வணக்கத்துடன்  வாழ்வோம் .  
*********************************************************************************

                                                         திருநந்தி தேவர் 


   பாடல் --18

 வந்திறை யடியிற் றாழும் வானவர் மகுட கோடி 
பந்தியின் மணிகள் சிந்த வேத்திரப் படையாற் றாக்கி
அந்தியும் பகலுந் தொண்ட ரலகிடுங் குப்பை யாக்கும்
நந்தியெம் பெருமான் பாத நகைமலர் முடிமேல் வைப்பாம்.   (18)



விளக்கம் --18



இறைவன் திருவடிகளில் வந்து வணங்கிடும் கோடிக்கணக்கான  தேவர்களின் கிரீடங்கள் ,கீழே விழும் மணிகள் நாலாபக்கமும் சிதறி ஓடுவதுபோல் சிதற  ,அவர்களை தன்னுடைய சிவகணங்கள் என்னும் படையால் விரட்டி  ,அந்த இடத்தை தூய்மையாக்கி ----

அந்த திருவடிகளில் -- பக்தர்கள்,இரவும் பகலும் தங்களுடைய பக்தியால் கோலமிட்டு பலவித ஆராதனைகளையும் செய்து ---   அந்த இடத்தை குப்பைபோல ஆக்குவதை   அனுமதிக்கும் ----

நந்தியெம்பெருமானின் ஒளிவீசும் பாதங்களின் மீது நம் தலையை வைத்து வணங்குவோம்  ...

*********************************************************************************

                                                  ஆளுடைய பிள்ளையார் 

   பாடல் --19

கடியவிழ் கடுக்கை வேணித் தாதைபோற் கனற்கண் மீனக்
கொடியனை வேவ நோக்கிக் குறையிரந் தனையான் கற்பிற்
பிடியன நடையாள் வேண்டப் பின்னுயி ரளித்துக் காத்த
முடியணி மாடக் காழி முனிவனை வணக்கஞ் செய்வாம்.    (19)




விளக்கம் --19

நறுமணத்தை  எங்கும் பரவச் செய்தவாறு மலர்ந்த கொன்றை மலர்களால் ஆன மாலையை அணிந்த, சடைமுடியுடன் விளங்கும் 
தந்தையான சிவபெருமான் --

மீன்கொடியை கொண்ட பாண்டிய மன்னன் வெப்புநோயால் வருந்துமாறு அருள்புரிய --

அந்தமன்னனின் மனைவியான ,பெண்யானையை போன்ற நடையை உடைய ,கற்பில் சிறந்த பெண்ணான 'மங்கையர்க்கரசியார் '--தன்னுடைய கணவரின் குற்றத்தை பொறுத்து துன்பம் தீர்க்க வேண்ட ---

அந்த பாண்டிய மன்னனின் துயர் தீர்த்து ,உயிரளித்து காப்பாற்றிய ,மாடமாளிகைகளால் சிறப்புற்று விளங்கும் 'சீர்காழி 'யில் அவதரித்த முனிவரான 'திருஞானசம்பந்த பெருமானுக்கு 'வணக்கம் செய்வோம் .

*********************************************************************************

                                     ஆளுடைய அரசர் [திருநாவுக்கரசர் ]


   பாடல் --20

அறப்பெருஞ் செல்வி பாகத் தண்ணலஞ் செழுத்தா லஞ்சா*
மறப்பெருஞ் செய்கை மாறா வஞ்சக ரிட்ட நீல
நிறப்பெருங் கடலும் யார்க்கு நீந்துதற் கரிய வேழு
பிறப்பெனுங் கடலு நீத்த பிரானடி வணக்கஞ் செய்வாம்.     (20)





விளக்கம் ---20

அனைத்து அறங்களுக்கும் தலைவியாகிய உமையம்மையை தன்னுடைய இடப்பாகத்தில் கொண்ட அண்ணலின் ஐந்தெழுத்து மந்திரமாகிய 'நமசிவாய 'என்னும் நாமத்தை ,யாருக்கும் பயப்படாமல், மக்களுக்கு பரப்பியதால் ----

நல்லறத்திற்கு புறம்பான தீய செயல்களில் மீண்டும் மீண்டும் ஈடுபடும் தன்மை கொண்ட கொடுமணம் மிகுந்த சமணர்கள் ---பெரிய கல்லினால் கட்டி போட்ட நீலப்பெருங்கடலையும் -----

கருமை நிறம் கொண்ட ,கடந்து செல்ல மிகமிக கடினமான ,,ஏழு பிறவிக்கடலையும் --எளிதில் கடந்து கரை ஏறிய 

போற்றுவதற்கரிய பிரானான 'திருநாவுக்கரசரின்  'திருவடிகளுக்கு வணக்கம் செய்வோம் .

*********************************************************************************

                                                  ஆளுடையநம்பிகள் [சுந்தரமூர்த்தி ]


   பாடல் --21

அரவக லல்கு லார்பா லாசைநீத் தவர்க்கே வீடு
தருவமென் றளவில் வேதஞ் சாற்றிய தலைவன் தன்னைப்
பரவைதன் புலவி தீர்ப்பான் கழுதுகண் படுக்கும் பானாள்
இரவினிற் றூது கொண்டோ னிணையடி  
முடிமேல்                                                                                                                             வைப்பாம்.        (21)



விளக்கம் --21

விஷம் நிறைந்த பாம்பின் படம் போன்ற ,அகன்ற அல்குலையுடைய பெண்களிடத்து உண்டாகும் மோகத்தை அழித்தவர்களுக்கு  மட்டுமே  முக்தி என்னும் 'வீடுபேற்றை 'தருவேன் என்று 'வேதங்களில்' பறையறிவிப்பதுபோல் திரும்ப திரும்ப அழுத்தமாக சொல்லிய 
தலைவனான சிவபெருமானையே ----

பரவை நாச்சியார்  ,தன்மீது கொண்ட ஊடலை தீர்க்கும் படி ,பேயும் உறங்கும் நள்ளிரவில் தூதுவனாக அனுப்பும்  அளவுக்கு இறைவனின் அன்பைன்னும் அருளைப்  பெற்ற----

 'சுந்தரமூர்த்தி நாயனாரின் 'இணைந்த திருவடி மீது நம் தலையை வைத்து வணங்குவோம் .

*********************************************************************************

                                    ஆளுடைய அடிகள் [மாணிக்க வாசகர் ]

   பாடல் --22

எழுதரு மறைகள் தேறா இறைவனை யெல்லிற் கங்குற்
பொழுதறு காலத் தென்றும் பூசனை விடாது செய்து
தொழுதகை தலைமீ தேறத் துளும்புகண் ணீருள் மூழ்கி
அழுதடி யடைந்த வன்ப னடியவர்க் கடிமை செய்வாம்.     (22)





விளக்கம் --22


இறைவனாலேயே  ரிஷிகளுக்கு உணர்த்தப்பட்டு ---எழுத்துக்களால் எழுதப்படாமல் செவிவழியாகவே கற்ப்பிக்கப்பட்டு வரும் 'வேதங்களாலும் ' நமக்கு காட்டிக்கொடுக்க முடியாத இறைவனை ---

இரவு பகல் முதலான ஆறு காலங்களிலும் இடைவிடாது ,தலைமீது கூப்பிய கரத்துடன் ,கண்களில் கண்ணீர் வழிந்து ததும்ப ததும்ப ---அந்த கண்ணீரிலேயே மூழ்கி ---அழுது அழுது ---வணங்கி --

அந்த இறைவனின் தரிசனத்தை பெற்று அவர் திருவடியையே அடைந்த இறைஅன்பரான 'மாணிக்கவாசகர் 'என்ற அடியவருக்கு அடிமை ஆவோம் .

குறிப்பு ;--

இப்பாடலின் மூலம் வேதங்களை படிப்பதால் மட்டும் இறைவனை காண முடியாது ---

மிக மிக ஆழ்ந்த --உள்ளத்தின் நடுப்பகுதியிலிருந்து 
வற்றாத ஊற்று போல் பெருகி ஓடும்  பக்தியினாலும் ,வேண்டுதல்களாலும் மட்டுமே இறைவனை காண முடியும் ---

என்று உணர்த்துகிறார் 

*********************************************************************************

                                     சண்டேசுரரும் மற்ற திருத்தொண்டர்களும் 

   பாடல் --23

தந்தைதா ளொடும்பிறவித் தாளெறிந்து     நிருத்தரிரு தாளைச் சேர்ந்த
மைந்தர்தாள் வேதநெறி சைவநெறி
     பத்திநெறி வழாது* வாய்மெய்
சிந்தைதா னரனடிக்கே செலுத்தினராய்ச்
     சிவாநுபவச் செல்வ ராகிப்
பந்தமாந் தொடக்கறுத்த திருத்தொண்டர்
     தாள்பரவிப் பணிதல்                                                                                                                                               செய்வாம்.   (23)





விளக்கம் ---23

சிவபூஜையின் போது குறுக்கிட்ட தந்தையின் கால்களை வெட்டியபோதே ,தன்னுடைய பிறவிச்சுற்றின் தொடர்பையும் அறுத்தெறிந்து -'நிருத்தரான, 'இறைவனின் திருவடிகளை அடைந்து , சிவமைந்தர் ஆன 'சண்டேசுசுர நாயனாரின் ' திருவடிகளையும் ---

வேதநெறி ,சைவநெறி ,பக்திநெறி வழுவாது ,,வாய் ,மெய் மற்றும் சிந்தை முதலியவற்றை 'அரன் ;ஆகிய சிவபெருமானின் திருவடிகளில் செலுத்தியதால் ---

சிவனின் அருளை அடைந்து ,அதை அனுபவிக்கும் செல்வராகி --பாசம் பந்தம் என்னும் கர்மவினை தொடர்ச்சியை அறுத்து அதிலிருந்து மீண்ட ---அனைத்து திருத்தொண்டர்கள் திருவடிகளில் பணிவுடன் விழுந்து வணங்குவோம் .

*********************************************************************************

                                                                                                          கடவுள் வாழ்த்து 
                                                                                                          பொருள்எழுதியவர் 
                                                                                                    DR.S.வீரம்மா தேவி .MBBS


No comments:

Post a Comment